1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓடும் மேகங்களே - 22

Discussion in 'Stories in Regional Languages' started by Anu86, Dec 4, 2011.

  1. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஓடும் மேகங்களே - 22

    வெறுப்பின் பனி விலக
    வெறுமையான மனதில்
    பெருமையாய் உன்னை
    வைத்தேன் - வைத்த உன்னை
    மேகம் வந்து சூழ்ந்துவிட்டதே..

    அனைவரும் சமைத்து முடித்து நடுவர்களின் பார்வைக்காக தாங்கள் சமைத்ததை அழகுற வைக்க, தர்ஷினி மட்டும் மூடிய பாத்திரத்தின் மேல் அழகுப் படுத்திக் கொண்டிருந்தாள். அவள் சமையலுக்கு வித்தியாசமாக பெயரும் சூட்டியிருந்தாள். (அக்குவாரெட் - காரம், அக்குவாவெல்லம் - இனிப்பு) அவள் முறை வரவும் எழிலாக சிரித்தபடி அவள் நிற்க, வந்திருந்த நடுவர்கள் மூடியை விலக்க அங்கே ஆவிப் பறக்க இருந்ததைப் பார்த்து திகைத்து விட்டனர்.

    அவள் செய்த சமையல் செய்முறை விளக்கம் இதோ.. அவள் கைப்படவே எழுதியது.. (copyrights protected !!!!! pls do not copy !!!!!!!)

    அக்குவாரெட் (aquared ) - முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும், கை விட்டால் வெந்துவிடும் என்ற நிலை வந்ததும் கொஞ்சம் ரத்தமென சிவந்திருக்கும் மிளகாய்ப் பொடியைப் போட்டு இறக்கிவிடவும்.

    அக்குவாவெல்லம் (aquavellam ) - முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும், வேண்டுமென்றால் கையை உள்ளே விட்டே பரிசோதித்து பார்க்கவும்.. தண்ணீர் கொதிப்பது தெரிந்ததும் உள்ளே சர்க்கரையைப் போட்டு கலக்கி விடவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் இறக்கி விடவும்.

    தர்ஷினி காது வரை வாயை இழுத்துப் பிடித்து சிரித்துக் கொண்டிருக்க துறைத் தலைவி அமராவதி "தர்ஷினி என்ன இது.." என்று அதட்ட, "மேம், எனக்கு தெரிஞ்சத நான் செய்து வச்சிருக்கேன், சாப்பிட்டு பாருங்க, பிடிச்சா பரிசு கொடுங்க.." என்று அப்பாவியாக கூறினாள். நடுவர்களாக வந்தவர்கள் சாப்பிட்டு வேறு பார்க்க வேண்டுமா என்று திரும்பி பார்க்காமல் ஓட, தர்ஷினி திரும்பி அங்கே நின்றிருந்த சஞ்சீவைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள். அவன் முகம் கடுக்க அங்கிருந்து வெளியேறினான்.

    தோளைக் குலுக்கிவிட்டு தன் தோழியிடம் திரும்பி பேச ஆரம்பித்தாள். தற்செயலாக வாசல் பக்கம் திரும்பியவளின் கண்களில் அருளின் தோளில் கை போட்டு பேசிக் கொண்டு வந்த சஞ்சீவ் பட்டான். சஞ்சீவ் அவனிடம் சொல்லியிருப்பானோ, அவனாக கேட்கும் முன் தானாக போய் மன்னிப்புக் கேட்பது உசிதம் என்று நினைத்தவள் வேகமாக அவர்களிடம் சென்றாள்.

    "அருள்.. அது.. அது வந்து.. சும்மா தான்.. வந்து.. மன்னிச்சுடுங்க.." என்று உளறிக் கொட்டினாள். சஞ்சீவ் சிரிப்பை அடக்கி வாய்க்குள் சிரிக்க அருள் புரியாமல் "எதுக்கு மன்னிப்பு" என்றுக் கேட்டான். அவனது முரட்டுக்குரலில் ஏதோ அவன் கோபப்பட்டுக் கத்துவதாக நினைத்து "அருள் ப்ளீஸ் கோவப்படாதீங்க, நா ஏதோ ஒரு விளையாட்டுக்கு சொன்னேன்.." என்று மறுபடி தடுமாற, "என்ன விளையாட்டுக்கு சொன்ன" என்று அருள் கேட்டான். "இல்லை ஜெம்னு கூப்பிட்டது.. அதான் இஞ்சி.. இஞ்சி தின்ன குரங்குன்னு சொன்னது" ஒரு வழியாக சொல்லி முடித்தாள். அருள் சிரிக்க ஆரம்பிக்க சஞ்சீவும் சத்தமாக சிரிக்க புரியாமல் முழித்தாள் தர்ஷினி.

    ஒரு வழியாக சிரித்து முடித்த அருள் "காலேசுல இதெல்லாம் சகஜமப்பா" என்று சாதரணமாக சொல்லிவிட்டு நகர்ந்து போக, தர்ஷினி சஞ்சீவை முறைத்தாள். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு இவ்வளவு நாள் தன்னை மிரட்டிக் கொண்டிருந்திருக்கிறான். அவளின் முறைப்பைப் பார்த்து சஞ்சீவ் இன்னும் அதிகமாக சிரிக்க தர்ஷினிக்கு அவமானத்தில் கண்ணீர் வந்தது. அவள் கண்ணீரைப் பார்த்ததும் சிரிப்பை நிறுத்தியவன் "ஹே தர்ஷினி இப்போ எதுக்கு அழுவுற, அழாத.. நீ சின்னப்புள்ள தனமா பேசினதைப் பார்த்து உன்னை சீண்டிப் பார்க்கலாம்னு கேட்டா நீ மிரள ஆரம்பிச்சிட்ட, அதான் சும்மா சீண்டி பார்த்தேன்.. அழாதமா" என்று கூறினான்.

    அவள் அழுகை இன்னும் அதிகமானது. "தர்ஷினி அழாத சொல்றேன்ல.. சும்மா விளையாட்டுக்கு தானே.." என்று மறுபடியும் கூறினான். 'மிரட்டி மிரட்டி என்னலாம் பண்ண வச்சான்' என்று அழுகையூடே நினைத்துப் பார்த்தவளுக்கு புரிந்தது அவன் என்னவெல்லாம் செய்ய வைத்தான் என்று. அவன் செய்ததெல்லாம் அவளுடைய திறமையை வெளிக் கொணர்ந்தது மட்டுமே.. அழுகையை மீறி அவள் உதட்டில் புன்னகை நெளிய சஞ்சீவின் முகத்திலும் புன்னகை வந்தது. இருவரின் புன்னகையும் சிறிது நேரத்தில் சிரிப்பாக மலர்ந்தது.

    சிரிப்பு சிறிது நிற்கவும் "ஏன் இப்படி மிரட்டினீங்க" என்று புன்னகையுடனே கேட்டாள் தர்ஷினி. பதில் சொல்லாமல் அவளை ஆழமாக பார்த்தான் சஞ்சீவ். அவனின் பார்வை அவன் வார்த்தையால் சொல்லாத காதலை தர்ஷினிக்கு உணர்த்த தலைக் கவிழ்ந்தாள் தர்ஷினி. எவ்வளவு நேரம் இப்படியே நின்றார்களோ தெரியாது தினேஷ் வந்து "என்னடா மச்சான் ரெண்டு பெரும் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க" என்று அவர்களைக் கலைக்கும் போது தான் சஞ்சீவ் பார்வையை விலக்கினான். தர்ஷினி நிமிர்ந்து பார்த்தாள்.

    "ஒன்னுமில்லை.. சும்மா.. சும்மா.. பேசிட்டு இருந்தோம்..." என்று எதோ ஒன்றை சொல்லிவிட்டு தர்ஷினி அங்கிருந்து ஓட, தினேஷ் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான். "எலேய், நா அவ அண்ணன்ல, ஞாவம் இருக்கா உனக்கு" என்று சிரித்துக் கொண்டே கேட்டான். "ம்ம்ம் ஞாபகம் இருக்கு மச்சான்.. என் தர்ஷினியோட அண்ணன் நீ தானு" என்று பதில் கூற, "அடப்பாவி" என்று தினேஷ் மறுபடி ஒரு அடி வைத்தான்.

    அதற்கு பிறகு அவர்களது கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சிக்கரமாகவே சென்றது. ஒவ்வொவொரு நாளும் காலையில் ஒரே நேரத்தில் கிளம்பி ஒரே பேருந்தில் கல்லூரிக்கு வரும்போது பார்ப்பதில் ஆரம்பித்து மதிய இடைவெளியில் எதாவது ஒரு வேலை வந்து சஞ்சீவ் அவளது வகுப்பு பக்கமாய் வந்து அவளைப் பார்ப்பதில் தொடர்ந்து மாலை ஒரே பேருந்தில் வீட்டிற்கு திரும்பி செல்வது வரை அவர்களது பார்வை பரிமாற்றம் வார்த்தைகளில்லாமல் தொடர்ந்தது.

    இப்படியே அந்த கல்வியாண்டு முடியும் நேரமும் வந்தது. அந்த வருடம் சஞ்சீவ் அவனது முதுநிலைக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியில் செல்ல வேண்டும். பிரிவு உபசார விழாவும் வந்தது. அந்த விழாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளியில் செல்லும் மாணவ மாணவியரிடம் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

    தர்ஷினி "போகாதே நாடோடி நண்பா போகாதே.." என்ற பாடலை சஞ்சீவைப் பார்த்துக் கொண்டே பாடினாள். சஞ்சீவிற்கு புரிந்தது. அவள் படிப்பு முடியட்டும் வீட்டில் பேச வேண்டும். அதற்குள் தானும் தன் வேலைக்கான கனவில் வெற்றிப் பெற்று ஒரு நல்ல நிலையில் இருந்து அவளைப் பெண் கேட்டு போகவேண்டும். மண்டையில் ஓங்கி அடித்த மாதிரி இருந்தது சஞ்சீவிற்கு. மறந்தே போய் விட்டானே... தன்னுடைய வேலையைப் பற்றி அவளுக்கு தெரிய வந்தால்... கடவுளே அவளுடைய பதில் என்னவாய் இருக்கும்.. தர்ஷினியிடம் தன்மையாக பேசி அவனின் மனதைப் புரியவைத்து அவன் மீது நம்பிக்கை ஏற்படுத்திவிட்டு தன்னுடைய வேலையைப் பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    ஆனால் அவளுடைய பதில் சிறிது நேரத்திலேயே அவனுக்கு தெரிய வந்தது.. அவர்களது பிரிவுபசார விழாவில் ஜூனியர் மாணவர்கள் சொல்வதை சீனியர் மாணவர்கள் செய்ய வேண்டும்.. அப்படி ஒரு மாணவனிடம் அவனது அடுத்த லட்சியம் என்னவென்று கேட்க "ஏல நல்லா படிச்சி இந்த ஜில்லாவுக்கே பெரிய கலெக்டரா வரணும்னு தான்ல ஆச.. ஆனா சுட்டு போட்டாலும் கழுதை மண்டைல ஏறுவனாங்குது படிப்பு.. அதனால நல்ல படிச்சி வேலைக்கு போற ஒரு புள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு ஹவுஸ் ஹஸ்பண்டு ஆய்டலாம்னு பாக்றேன்ல.. இதுதாம்ல என் லட்சியம், கனவு எல்லாம்" என்று சொல்லி முடிக்க அரங்கம் முழுதும் சிரிப்பொலி ஒலித்தது.

    சஞ்சீவின் முறை வர தர்ஷினி ஆர்வமானாள். அங்கே கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த மாணவன் "அண்ணா.. வாங்கண்ணா... " என்று சொல்லி காவல் துறையில் உள்ளவன்போல் விறைப்பாக நின்று நெற்றியில் கை வைத்து சல்யுட் அடிக்க, சஞ்சீவ் துணுக்குற்றான். தானே அவளிடம் பேசினால் தான் சரியாக இருக்கும்... இவன் ஏதாவது பேசி அப்படி தெரியவந்தால் கண்டிப்பாக அவளிடம் இருந்து மறுப்பு தான் வரும். பின் தன்னைப் புரியவைக்க சந்தர்ப்பமே கிடைக்காது. ஆனால் அவனால் மேடையில் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அதற்குள் அந்த மாணவன் பேச ஆரம்பித்துவிட்டான்.

    "சஞ்சீவ் அண்ணா, உங்க லட்சியமே ஐ.பி.எஸ் பாஸ் பண்ணி ஒரு பெரிய போலீஸ் ஆபிசரா வரணும்ங்றது தான்.. இப்போ உங்களுக்கு நான் சிட்டுவேஷன் கொடுக்க போறேன்.." என்று அவன் பேச ஆரம்பிக்க சஞ்சீவ் தர்ஷினியின் முகத்தைப் பார்த்தான். அவன் பயந்தபடியே அவள் முகம் அடிப்பட்ட உணர்வுடன் இருந்தது.

    "ம்ம் நல்லா கேட்டுகோங்க.. நீங்க இப்போ தூத்துக்குடிக்கு புதுசா வந்திருக்கிற கமிஷனர். இப்போ நான் அதோ இருக்கிற நம்ம சூப்பர் சுந்தரியப் பாத்து "கன்னத்தில் முத்தமிட்டால்.." அப்படினு பாடினா என்ன பண்ணுவீங்க" என்று கேட்டு நிறுத்த அங்கிருந்த சுந்தரி அவனைப் பார்த்து செருப்பை எடுத்து காமிக்க "ஹையோ ஒரு தென்றல் புயலாக மாறுகிறதே" என்று சஞ்சீவ் பக்கம் மறுபடியும் திரும்பி "எனக்கு கடமைதான்பா முக்கியம் அப்டின்னு போலீசா என்னை ஈவ் டீசிங் கேசுல புக் பண்ணுவீங்களா.. இல்ல நம்ம தம்பி அப்டின்னு விட்டுடுவீங்களா அண்ணே.." என்று கேட்க சஞ்சீவ் தர்ஷினியையே பார்த்துக் கொண்டிருந்தான். தர்ஷினி கண்களில் இருந்து கண்ணீர் வழிய சஞ்சீவை நிமிர்ந்தும் பார்க்காமல் தன் பையை எடுத்துக் கொண்டு அந்த அரங்கை விட்டு வெளியேறினாள்.

    பக்கத்தில் இருந்த ஒரு நோட் புக்கை எடுத்து அந்த மாணவனை அடித்து "இப்படிதான் துரத்தி துரத்தி அடிப்பேன்" என்று கூறிவிட்டு சஞ்சீவ் வேகமாக கீழிறங்கி ஓடினான். விஷயம் தெரியாத அவர்கள் சிரித்துக் கொண்டிருக்க சஞ்சீவிற்கு தர்ஷினியை நினைத்துக் கவலையாக இருந்தது. அவளைப் பிடித்து இன்று அவளிடம் பேசிவிட வேண்டும் என்று வேகமாக வெளியில் வந்தான். வந்தவனுக்கு அவள் எங்கே சென்றாள் என்றே தெரியவில்லை. தினேஷும் வெளியில் வர இருவரும் கல்லூரி முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. சஞ்சீவ் சோர்ந்து போனான். "வீட்டுக்கு போயிருப்பால.. நாளைக்கு பேசு அவகிட்ட" என்று தினேஷ் சமாதானம் செய்ய சஞ்சீவும் எழுந்து வீட்டிற்கு கிளம்பினான்.

    அரங்கில் இருந்து வெளியில் வந்த தர்ஷினி கல்லூரியின் வெளியில் வரவும் ஒரு பேருந்து வரவும் சரியாக இருந்தது. அவள் கால் பாட்டுக்கு பேருந்தில் ஏற அவள் கல்லூரி முதல் நாள் வரும்போது அமர்ந்த முதல் இருக்கை காலியாக இருக்க அதில் அமர்ந்தாள். அவளுக்கு சஞ்சீவைப் பார்த்த நாளிலிருந்து பிடித்திருந்தது. இடையில் ஏற்பட்டிருந்த வெறுப்பின் பனியும் கொஞ்சம் கொஞ்சமாக விலக அவளுக்கு அவன் மேல் முழு ஈடுபாடு வந்திருந்தது. இந்த நேரத்தில் அவள் வெறுத்து ஒதுக்கும் காவல் துறையில் கால் பதிப்பதையே அவன் லட்சியமாக வைத்திருக்கிறான் என்று தெரிந்ததும் அவளுக்கு தாங்க முடியவில்லை. தலை வலிக்க இருக்கையில் நன்றாக சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள் தர்ஷினி.

    சிறிது நேரத்தில் "என்ன பாப்பா, எப்புடி இருக்க, வீட்டுல தங்கச்சி எல்லாம் சுகந்தானா" என்ற வெத்தலை நாற்றத்தோடு வந்த கேள்வியில் உடல் விதிர்விதிர்க்க எழுந்தாள். அங்கே சின்னசாமி பேருந்தின் வாயிலில் நின்றுக் கொண்டு தன் கரைப் படிந்த பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தான்.

    சின்னசாமியை இவ்வளவு நாள் கழித்துப் பார்த்த ஆத்திரம் சில மாதங்களாக அவளுக்குள் அடங்கியிருந்த வெறியைத் தலைத் தூக்க செய்தது. இருக்கையில் இருந்து எழுந்தவள் அப்பொழுது தான் ஒரு நிறுத்தத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து சின்னசாமியின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து தள்ளி விட்டாள். இதை எதிபார்க்காதவன் "ஏய்..ஏய்.." என்று அலறிக் கொண்டு கீழே விழ, பேருந்தில் இருந்தவர்கள் சுதாரிக்குமுன் அங்கிருந்து ஆத்திரம் தந்த வேகத்தில் நடக்க ஆரம்பித்தாள் தர்ஷினி.

    ஊருக்கு முன்னாலேயே இறங்கியவள் ஊருக்குள் வராமல் ஆற்றங்கரைப் பக்கமாக நடந்தாள். மூன்று ஆறுகளும் கடலும் சங்கமிக்கும் முக்கூடல் இடம் சிறிது தூரத்தில் இருக்க அதில் ஒரு ஆற்றின் கரை ஓரமாக இருந்த மாந்தோப்பில் நுழைந்து இரு மாமரத்தின் மறைவில் ஆற்றின் ஓரமாக அமர்ந்து தண்ணீரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி. அவளுக்கு ஐந்து வயதில் வந்த மான் கனவு நினைவு வந்தது. அதுபோலவே அவள் தந்தை அவளை விட்டு பிரிந்துவிட்டாரே..

    கல்லூரியில் தர்ஷினியைத் தேடிவிட்டு திரும்பி வந்த சஞ்சீவ் வீட்டிற்கு போகப் பிடிக்காமல் கடல் சங்கமிக்கும் இடத்திற்கு போனால் மனம் அமைதியாகும் என்று அந்தப் பக்கமாக வந்தான். அங்கு தர்ஷினி அமர்ந்திருப்பதைப் பார்த்தவனுக்கு ஒரு புறம் நிம்மதியுடனும், இன்னொரு புறம் அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று குழப்பத்துடனும் அவளை நெருங்கினான்.

    அவள் பக்கத்தில் சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்தான். அவன் வந்ததை அவள் உணரவே இல்லை என்பதை உணர்ந்து மெதுவாக அவள் தோளைத் தொட்டு "தர்ஷுமா.." என்று அழைத்தான். இதுவரை அவன் அவளை இப்படி அழைத்ததில்லை. தர்ஷினி என்று தான் அழைப்பான்.

    ஏற்கனவே தன் தந்தையின் நினைவில் மூழ்கி இருந்தவள் அவன் 'தர்ஷுமா..' என்று அழைத்ததும் அவன் பக்கம் திரும்பி மலங்க மலங்க முழித்தாள். அவள் முகம் அவனை எதுவோ செய்ய கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கி விட்டவன் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான். அவன் அழைப்பும், செய்கையும் அவளது தந்தையை ஆழமாய் நினைவுப் படுத்த சஞ்சீவின் தோளில் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். சஞ்சீவ் பதறிப் போனான்.

    இடையில் பேருந்தில் நடந்தது அவனுக்கு தெரியாது அதனால், தான் ஐ.பி.எஸ் ஆகப் போவதை நினைத்து தான் அழுகிறாள் என்று நினைத்தவன் அவளை சமாதானம் செய்யும் நினைப்பில் "பாரு தர்ஷுமா.. இங்க பாரு.. எதுக்கு அழுவுற.. அழாதமா.. இங்கே பாருடா.. நீ நினைக்கிற மாதிரி இல்லடா.. கொஞ்ச நாள் கழித்து நானே சொல்லி புரிய வைக்கலாம்னு பாத்தேன்.. அதுக்குள்ளே நீ இப்படி தெரிஞ்சிகிட்ட.. இங்க பாருடா.. ஒண்ணுமில்லமா.. எல்லாத்தையும் மாதிரி நான் இருக்க மாட்டேன்.. " என்று அவன் கூற, அவன் கூறுவது புரியவில்லை ஆனாலும் அவன் தோளை வருடுவதும் கூந்தலை ஒதுக்குவதும், தர்ஷுமா என்ற அழைப்பும், அவளின் மனதை சமாதானப் படுத்தி அழுகையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, விசும்பலில் நின்றது.

    அவளின் மன நிலையை உணராதவன் மேலும் விளக்கம் சொல்வதாக நினைத்து "போலீஸ் டிபார்ட்மென்ட்ல எல்லாருமே மோசம் கிடையாதுமா.. அதை நான் உனக்கு நிருபிப்பேன்.. என்னை நம்பு தர்ஷுமா.." என்று அவன் கனிவாக சொல்ல அப்பொழுதுதான் தர்ஷினிக்கு அவன் ஐ.பி.எஸ் கனவு நினைவு வந்தது. தான் அவன் தோளில் சாய்ந்திருக்கும் நிலையும் தான்...

    சட்டென்று அவனிடம் இருந்து விலகியவள் எங்கேயோ பார்த்துக் கொண்டு, "அப்படி ஒன்னும் எனக்கு நிருபிக்கனும்னு அவசியம் கிடையாது... நீங்க நினைச்சாலும் அங்க ஒழுங்கா இருக்க முடியாது.. மாத்திடுவாங்க உங்களையும்.. வேண்டாம்.. எனக்கு எதுவுமே வேண்டாம்.. இங்கே இருந்து போய்டுங்க" என்று அலறினாள். "தர்ஷுமா.. வேண்டாம் அவசரப்பட்டு முடிவு எடுக்காத.. நா சொல்றத கேளு.. அப்புறமா முடிவு பண்ணு.. " என்று சஞ்சீவ் மறுபடி அவளை நெருங்கினான். வேகமாக எழுந்து தர்ஷினி நடக்க ஆரம்பிக்க சஞ்சீவ் அவள் வழியை மறித்தான்.

    "தர்ஷுமா.." என்று அவன் கூப்பிட தர்ஷினியின் கண்களில் வலி தெரிந்தது. "தயவுசெய்து என்னை அப்படி கூப்பிடாதீங்க.. " என்று சொல்லிவிட்டு மேலும் நடக்க எத்தனித்தாள். ஆனால் இரு மரங்களுக்கு இடையில் அவன் வழியை மறித்து நிற்க பின்னால் ஆறு ஓட வேறு வழி இல்லாமல் அங்கே நின்றாள்.

    இவளுக்கு வெறும் வார்த்தையால் எப்படி புரிய வைப்பது என்று நினைத்த சஞ்சீவ் "தர்ஷுமா.. உன்னை உயிரா நேசிக்கிறேன்மா.. என்னைக்கு அந்த கலவரத்துல உன்னை பார்த்தேனோ அன்னில இருந்து... என்னோடது சின்ன வயசு கனவு ஐ.பி.எஸ்... உனக்கு அடிப்பட்ட மனசு.. நம்ப முடியாது தான்.. ஆனாலும் எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடு.. நா ஐ.பி.எஸ் பாஸ் பண்ணி வேலையில சேர்ந்து அப்புறமும் கறைப் படியாம இருந்து அந்த டிபார்ட்மென்ட்லயும் ஒழுங்கா இருக்க முடியும்னு நிரூபிக்கிறேன்.. அப்புறமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று அவளுக்கு புரிய வைத்துவிடும் வேகத்தில் சொல்ல, அவளோ அவனை நம்பாமல் பார்த்து ஏளனமாக விரக்தியோடு சிரித்தாள்.

    "வேணாம் சஞ்சீவ் எனக்கு யார்மேலேயும் நம்பிக்கை இல்ல..முக்கியமா அந்த போலீஸ் டிபார்ட்மென்ட் மேல.. ஒழுங்கா இருந்த என் அப்பாவை மாத்தினது அந்த டிபார்ட்மென்ட் தான்." என்று கூறிய அவள் கண்கள் கலங்கியது. இன்னும் நின்றிருந்தால் எங்கே அப்பொழுது போல் அவன் மேலேயே சாய்ந்து அழுதுவிடுவோமோ என்ற பயம் வர நிமிர்ந்து "இப்போ வழியை விடப் போறீங்களா இல்லையா" என்று கேட்டாள்.

    அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்ற வழி தெரியாமல் அவளையே சஞ்சீவ் பார்த்துக் கொண்டிருக்க அதற்கு மேல் தாங்காமல் வேகமாக திரும்பியவள் சட்டென்று தழும்பி ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் குதித்து விட்டாள். சஞ்சீவ் அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான்.

    மேகம் ஓடும்..

    அனு
     
    3 people like this.
    Loading...

  2. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Anu,

    Welcome back... Nice episode:thumbsup. yenappaa idhu... dharshu ippadi panittaa... paavam sanjeev....

    Ho... ungaloda updattukku inikku naand dhaan first-aa...:rotfl
     
    1 person likes this.
  3. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hi Nithi..

    Thanksu pa first commentsku..

    pavam than pa sanjeev.. kathalukum kanavukum naduvula thavikiran..

    Anu

     
  4. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Welcome back Anu...

    Achchaco.... antha student sanjeev kanava kavuththuttaney....
    Intha Chinna samikku vera vela illaya... yen ipdi romba pasam irukkarapla act kudukkaraan....

    Dinesh nalla machchaanda nee... thangaya siste adikk green signal kudukkaraa... unna maathiri friend iruntha loverskku perchchana ye kidayaadhu....

    Darsh & Sanjeev unga bet yenna paa??????
     
    1 person likes this.
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Achacho ena idhu ippdi panita dharshu....
     
    1 person likes this.
  6. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Anu,

    ennapaa vilakki odiruvaanu paarthen ippadi thobakadeernu aathula kuthichitaa.......unexpected...
    darshu...vin vali puriyuthu..sanjeevin nilaiyum puriyuthu...engalukku purinji enna seiyya thaan theriyalai..
    nice episode..romba nalla irunthathu..anu..
     
    1 person likes this.
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    hi anu pa,

    dharshu sanjeev romba love pannara..........
    sanjeev sekkaram avaluku puriya vai pa..........
    achachooo ippa thannila kuthichutale enga achi
    anu pa sikkaram adutha part post pannuga pa........

    superrrrrrrrrrrrrrrrrrrr................
     
    1 person likes this.
  8. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai anu...
    nice update ma... dharshu enna ma shock treatment ella kudukra thannila kuthichu.....
    what s going to happen ?
     
    1 person likes this.
  9. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hai Sowmy...

    thanks pa.. adutha episode potuten pa.. padichitu sollunga..

    Anu
     
  10. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hai puthuponnu...

    vanga vanga... thanks pa..

    Anu
     

Share This Page