1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காந்தள்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 25, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எத்தனை வண்ண
    மாற்றங்கள் உன்னில்
    காணத் திகட்டாது
    எங்கள் கண்ணில்

    இலை பச்சையில்
    அரும்பாகி, மொட்டாகும்
    வரை தலை
    கவிழ்ந்தே இருப்பாய்

    உன் இதழ் விரிகையில்
    மெதுவாய் உன் இதழ்கள்
    பின்னோக்கி வளைந்து
    தளிர் பச்சையிலிருந்து
    அடர் சிவப்பு வரை
    நடுவில் மஞ்சளுடன்
    அழகிய நிறக் கலப்பில்
    காண்போர் கண்களை
    கொள்ளை கொள்வாய்

    நீண்ட ஈட்டி போன்ற
    உன் இலைகள், அதன்
    முனையில் வரும் சிறிய
    கம்பி போன்ற அமைப்பை
    பற்றுதலாய் கொண்டு
    கம்பீரமாய் நிற்கும் உந்தன்

    காண்கையில் மட்டும் அல்லாமல்
    எங்களைக்காக்கும் மருந்தாகவும்
    பயன்படுவதனால் தானோ
    உனக்காக தபால் தலை கூட
    வெளியிட்டார்களாம்
     
  2. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    i used to read abt these flowers when i am studying in my 8th std venima!! but now only i am seeing thro; ur post and came to know abt the stamp of it. really nice poem my dear poetess.......
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காந்தளைப் பற்றிய கவிதை,
    காந்தமாய் இழுக்கிறது என்னை.

    மருந்தாய், மனதிற்கு இதம் தரும்,
    பூவாய் நீ இருப்பதை இன்று தான்,
    எனக்கு நண்பர் வேணி சொன்னார்.

    உனக்கு கோபமாய் இருந்தால்,
    உன் கோபச் சிவப்பை
    வேணியிடம் காட்டு காந்தளே. :)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    My dear Vino,

    Thank you for your first and sweet feedback friend. Me to studied the same in school days. Not this much detailed. google irukka kavalai etharkku? Search-la pottu thiranthidu seasenna appadiye alli kottuthu informationsa.

    Thank you once again dear
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Another lovely poem on flowers. Idhu ethanaavathu poo. Ambikapathy film la varaa maathiri ethaavathu count vaithuk kondu irukkureergala?

    Thanks a lot for introducing to me flowers unknown till this day (for me). Anaal mudinthal intha flower's English Name (not the botanical one) koduthirunthaal nandraaga irundirukkum.

    BTW are you a botany student or the love for nature induces to write on so many flowers.
    I am anxiously waiting for the flowers introduced to me by Shivaji the Boss.

    (something like Aambal........... Mavval etc.)

    The special bonus is the colourful attachments of pictures - sevikku unavu ungal kavithai
    vizhikku unavu ungal photos

    You really rock veni!!!
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear veni

    Kandal malarai patriya virivana kavidai, manadai kollai kollum pugaipadathudan. Thodarattum umadu pani. Neengal pookkal pugazh paada ivvaiyaga pookkalellam ungal pughazh padattum , avargalai engalukku arimughapadduthiyadarkku.


    ganges
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    மலர்களிடம் நான் கொண்டது காதல், அதனால் எங்களுக்கிடையில் அவ்வபோது நடக்கும் சிறு ஊடல். மற்றபடி பெரிய கோபம் எல்லாம் வராது. ஒருவேளை நாணத்தால் மேலும் சிவந்தாலும் சிவக்கலாம்.

    எனது கவிதை படித்து, ரசித்து நல்ல கருத்து சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல பல
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மல்லிகா,

    மலர்களின் எண்ணிக்கையை நண்பர் வைத்துள்ளார். அவர் சொல்லுவார் இது எத்தனையாவது மலர், இன்னும் எவ்வளவு மலர்கள் பற்றி எழுத வேண்டும் என்பதெல்லாம். எல்லாம் முடிந்து விட்டாலும், வேறு ஏதாவது ஒரு பெரிய பட்டியல் தருவார். அதில் நான் சொல்லாமலே எனக்காக அவரே அறிவிப்பார். (இப்படிதான் என்னை இந்த பூ பத்தி கவிதை எழுதறதில மாட்டி விட்டுட்டார். மொதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. எப்படிடா இதனை பூ பத்தி எழுதறதுன்னு, இப்போ ஒவ்வொரு பூ பத்தி தேட தேட அதுவே எனக்கு ரொம்ப இஷ்டமா போய்டிச்சு.)

    மலரின் பெயர் மலர் படத்திலே இருந்ததால் தான் போட வில்லை. அதன் பெயர் க்ளோரிங் லில்லி. நல்ல அழகான பூ இல்ல தோழி, எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு, கல்கி நாவல்ல வரும் செங்காந்தள் போன்ற இதழ் அப்படின்னு, அப்போ எனக்கு தெரியல அது எப்படி இருக்கும்-ன்னு. நான் botony ஸ்டுடென்ட் எல்லாம் இல்லீங்க. இயற்க்கை நேசிக்கும் ஒரு பெண் அவ்வளவுதான். அந்த நேசம் தான் அதன் எல்லா அதிசயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள செய்கிறது.

    ஆம்பல், மௌவல் பத்திதானே, நீங்க கேட்டா சொல்லாம இருக்க முடியுமா?? இதோ இன்னைக்கே எழுதிறேன். நன்றி தோழி, அழகான, அருமையான உங்கள் பின்னூட்டத்திற்கு
     
    Last edited: Mar 26, 2010
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா,

    எத்துனை அழகிய மலர்கள் இல்லையா? ஆனாலும் நமக்கு காணக் கிடப்பது இல்லை. இதுபோல நல்ல அழகிய பின்னூட்டம் கிடைக்குமானால் இன்னும் எழுதலாமே பல மலர்களை பற்றி. காத்திருங்கள் தோழி, பட்டியல் பெரிதாகத்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு மலர்.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     

Share This Page